TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
      தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
      தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
      தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
      தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
      தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
      தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
      தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
      தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
      தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

Similar topics
    CONTACT ADMIN

    தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்

    4 posters

    Go down

          தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  Empty தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்

    Post by lakshana Sat Jan 01, 2011 7:24 am

          தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  Kumudamcartoondmk



    2050 வரை(no need up to 2015) திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது இப்படித்தான்.


    தமிழ்

    முதலில் " கடவுள் வாழ்த்து "

    மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
    திருக்குவளை தீய சக்தியே போற்றி
    மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
    காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி
    கனிமொழியின் தந்தையே போற்றி
    செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
    அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
    தளபதியின் தந்தையே போற்றி
    மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
    குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
    வீல் சேரில் வரும் வில்லனே போற்றி
    சிங்களனை வாழவைத்த சிற்பியே போற்றி
    ஈழத்தை அழித்த இதயமே போற்றி
    தமிழின துரோகியே போற்றி போற்றி


    அடுத்து மொழி வரலாறு.

    தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.

    தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.

    20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில பார்ப்பன ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன. 2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி,கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.

    21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம்,உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.

    கணிதம்.

    திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி, பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.

    அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.

    பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக எப்படி பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.

    1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.

          தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  Cartoonkaruna


    புவியியல்

    உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி, கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.



    தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.

    வரலாறு

    தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.

    கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயக்குமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது. உதயக்குமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.

    கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.


    திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.


    தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன். அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
    அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.

    பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்....
    lakshana
    lakshana
    Admin

    Posts : 6
    Join date : 2010-02-10
    Location : india

    Back to top Go down

          தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  Empty Re: தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்

    Post by KaRtHiS Sat Jan 01, 2011 7:34 am

    தி மு ஆட்சியில் இருப்பதால் தான் 2010தில் கூட இவ்வளவு தைரியமாக எழுத முடிகிறது.

    KaRtHiS

    Posts : 13
    Join date : 2010-12-15

    Back to top Go down

          தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  Empty Re: தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்

    Post by lakshana Sat Jan 01, 2011 8:00 am

    கார்த்திஸ் அந்த தைரியத்துல தானே இந்த போஸ்ட் போட்டேன் ஹாஹ்ஹஹா .புத்தாண்டு நல்வாழ்த்துகள் கார்த்திஸ்

          தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  Happynewyearbj

    lakshana
    lakshana
    Admin

    Posts : 6
    Join date : 2010-02-10
    Location : india

    Back to top Go down

          தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  Empty Re: தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்

    Post by KaRtHiS Sat Jan 01, 2011 8:42 am

          தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  Happy-new-year-2011

    HAPPY NEW YEAR

    KaRtHiS

    Posts : 13
    Join date : 2010-12-15

    Back to top Go down

          தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  Empty Re: தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்

    Post by BE HAPPY Sat Jan 01, 2011 10:09 am

    haha....ithu 2015 nadakkum enbathil santhegam illai.... nalla katturai...thx lakshana

    ennoda karuthu, intha rendu peraiyum tamilnadu politics la irunthu veliya anuppanum.. video paarunga teriyum(not only joke, it is real also)..


    BE HAPPY

    Posts : 26
    Join date : 2010-02-06

    Back to top Go down

          தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  Empty Re: தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்

    Post by Goody Sat Jan 01, 2011 9:29 pm

    வாழ்த்துக்கள் லக்ஷனா.. தைரியத்துடன் பகிர்ந்ததற்கு.. இளைய தலைமுறையினர் ஆகிய நாம் இதனை பற்றி கவலை கொள்ளாமல் எனக்கென்ன என்று இருப்பதால் தான் இத்தகைய கூத்து தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது. இப்போதைய நமது தலையாய கடமை, தி.மு.க. வை வழியனுப்பி வைப்பது தான். வரும் காலங்களில் நமக்கான தலைவரை இனம் கண்டு ஆதரிப்பது அடுத்ததாக செய்ய வேண்டியது. நம்மால் முடிந்தவரை நம்மை சார்ந்தவர்களிடம் இதனை பதிவு செய்வதும் நமது கடமை.

    Goody

    Posts : 30
    Join date : 2010-12-10
    Age : 39
    Location : Chennai

    Back to top Go down

          தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்  Empty Re: தி மு க -2050- அல்ல 2015- ல் கூட இது நடக்கலாம்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum