Latest topics
CONTACT ADMIN
BTC Live Users
ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்...
Page 1 of 1
ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள்...
அஷ்டமா சித்திகள் என்றால் என்ன?
முருகன் சிவகாசி
- பெரிய உடலை அணு அளவிற்கு சுருக்கி காட்டும் அணிமா சித்தி
- மிகச் சிறியதை இமயமலை அளவிற்கு பெரிதாகக் காட்டும் மஹிமா சித்தி
- காற்றோடு காற்றாய் கலந்து எடையற்று இருக்கும் லஹிமா சித்தி
- மிக கணமாக எடையை பெருக்கி காட்டுவது கரிமா சித்தி
- எல்லாவற்றின் மீதும் ஆட்சி செலுத்துவது பிராப்தி சித்தி
- எல்லோரையும் தன்வசப்படுத்தும் வசித்துவ சித்தி
- ஓர் உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்குள் பயணப்படும் கூடுவிட்டு கூடு பாயும் விதத்தை என்னும் பிராகாமிய சித்தி
- விரும்பியவற்றை செய்து முடித்து முழுமையாக அனுபவிப்பது ஈசத்துவ சித்தி
சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள் எவை?
கவிதா சேலம்
கார்த்திகை பௌர்ணமி அன்று
கடைபிடிக்கும் உமா மகேஷ்வர விரதம், மார்கழி மாத திருவாதிரை விரதம்,
பங்குனி உத்திரத்தன்று கல்யாண விரதம், தைப்பூசத்தன்று பாசுபத விரதம்,
வைகாசி மாத வளர்பிறை அஷ்டமியில் கடைப்பிடிக்கும் அஷ்டமி விரதம்,
தீபாவளியன்று அனுஷ்டிக்கும் கேதர விரதம், மாசி மாத மஹாசிவராத்தி விரதம்
இவையெல்லாம் சிவபெருமானின் அருளைப் பெற உதவும். மேலும் தினசரி பஞ்சாசர
மந்திரத்தை உச்சாடனம் செய்வதே சிவ பெருமானுக்கு உகந்த மஹா விரதம் ஆகும்.
ஸ்ரீ ஆஞ்சநேயரை பஞ்ச பூதங்களை வென்றவர் என்று சொல்வது ஏன்?
ராமன் ஈரோடு
- அவர் வாயுகுமாரன் என்பதனால் காற்றை வென்றவர் ஆனார்.
- இராம நாம சக்தியால் சமுத்திரத்தை தாண்டியதனால் நீரை வென்றவர் ஆனார்.
- பூமாதேவியான சீதாபிராட்டியின் பூரண அருளை பெற்றதனால் நிலத்தை வென்றவர் ஆனார்.
- இலங்கையில் வாலில் வைத்த தீயால் இலங்காதகனம் செய்ததனால் நெருப்பை வென்றவர் ஆனார்.
- வானத்தில் நீந்திடும் ஆற்றல் உடையவரானதால் ஆகாயத்தை வென்றவர் ஆனார்.
இப்படி ஐம்பூதங்களையும் அடக்கிய ஆஞ்சநேயர் ராமா என்ற இரண்டு எழுத்தில்
அடங்கி விடுகிறார். அந்த ராம நாமத்தை யார் முழுமனத்தோடு சொல்கிறார்களோ
அவர்களுக்கும் ஆஞ்சநேயர் அடங்கி விடுகிறார்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Sun Dec 09, 2012 9:13 pm by msc_arun
» *~*Kavalan comedy Videos.*~*
Fri Aug 24, 2012 9:52 am by thirumalai
» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
Tue Feb 28, 2012 3:14 am by lavivi
» *~*இவன் அவன்*~*
Sat Mar 19, 2011 9:30 pm by Tamilkings
» *~*மரணம் நிச்சயம்!*~*
Sat Mar 19, 2011 9:28 pm by Tamilkings
» *~*கல்வி*~*
Sat Mar 19, 2011 9:26 pm by Tamilkings
» *~*ராணித் தேனீ*~*
Sat Mar 19, 2011 9:25 pm by Tamilkings
» *~*பெண்..........*~*
Sat Mar 19, 2011 9:23 pm by Tamilkings
» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
Sat Mar 19, 2011 9:21 pm by Tamilkings