Latest topics
Similar topics
CONTACT ADMIN
BTC Live Users
சாதனைப் பெண் சவிதா
Page 1 of 1
சாதனைப் பெண் சவிதா
சாதனைப் பெண்கள்:'பெஸ்ட் பாலே டான்ஸர்' விருதுபெற்ற சவிதா!
பரவசப்படுத்தும் பரதநாட்டியம், 'பலே' என சொல்ல வைக்கும் பாலே நடனம், மெய் சிலிர்க்க வைக்கும் மேற்கத்திய நடனம், மயக்கும் சங்கீதம், சமையல், சினிமா, டிவி, விளம்பரங்களில் நடிப்பு, கூடைப்பந்து, எறிபந்து மற்றும் கோகோ என பல அவதாரங்களில் ஜொலிக்கும் சவிதாவுக்கு நடனம் என்றால் உயிர். ஆடுகிறார்.. தினமும் ஆடிக்கொண்டே இருக்கிறார். 20 வயதான சவிதாவின் திறமைக்குச் சான்று... இத்தனை வயதுக்குள் பல மேடைகளைக் கண்டவர், பல கலைகளில் பரிசுகளை, கோப்பைகளை வென்று கைத்தட்டல்களைப் பெற்றவர். கலைக்காக 24 மணி நேரமும் பயிற்சி, போட்டி என ஓடிக் கொண்டே இருக்கிறார் என்று தோள் குலுக்குகின்றனர் இவரது தோழிகள்! இனி அவரிடம் பேசுவோம்,
நான் அடையாரில் உள்ள இந்து சீனியர் செகண்டரி பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து, குமாரராணி மீனா முத்தையா பள்ளியில் பிளஸ் டூ வரை முடித்தேன். தற்போது சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரத்தில் மூன்றாமாண்டு படித்து வருகிறேன்.
எனக்கு சின்ன வயதிலிருந்தே விளையாட்டின் மீதும், நடனத்தின் மீதும் தீராத ஆர்வம். கடந்த மூன்று வருடங்களாக பரதம் பயின்று வருகிறேன். கல்லூரிக்கு வந்த பின்னர் ஜிம்னாஸ்டிக் டான்ஸ், பாலே, நாட்டுப்புற நடனம், வெஸ்டர்ன் என அனைத்து வகையான நடனங்களையும் கற்று வருகிறேன். சின்ன வயது முதலே எனக்கு மேடைக்கூச்சம் இல்லை என்பதால் அபிநயம், நடிப்பு என அனைத்தும் எளிதாக வரும். இதை அனைவரும் பாராட்டுவார்கள். பள்ளி, கல்லூரிகளில் விழாக்களில் வெஸ்டர்ன், பரதம், நாட்டுப்புற நடனம் என அனைத்து நடனங்களும் ஆடி பரிசுகள் வாங்கியுள்ளேன்.
என்னுடைய அம்மா ஒரு விளையாட்டு வீராங்கனை என்பதால் எனக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே ஊக்கமும், பயிற்சியும் அளித்தார். இதுவரை ஓட்டப்பந்தயம், கூடைப்பந்து, எறிபந்து, கோகோ போன்ற விளையாட்டுப் போட்டிகளிலும் மாநில அளவில் பரிசுகள் பெற்றுள்ளேன். எங்களுடைய பள்ளியில் நான் 'சிறந்த விளையாட்டுப் பெண்' என்ற விருதையும் பெற்றுள்ளேன். சின்ன வயதிலேயே தனியார் தொலைக்காட்சி நடத்திய டான்ஸ் போட்டியில் வென்று, பிரபல நடிகர் மற்றும் நடன இயக்குநர் பிரபுதேவா கையால் 'பெஸ்ட் டான்ஸர்' விருது பெற்றேன்!?' கண்கள் விரிய சந்தோஷப்படுகிறார் சவிதா.
தொடர்ந்து பேசுகையில், "எப்படி எல்லா விஷயத்தையும் ஒரே சமயத்தில் கற்றுக் கொள்ள முடிந்தது என்று சிலர் என்னிடம் கேட்பார்கள். எதுவாக இருந்தாலும் பயிற்சி மற்றும் ஆர்வம் இருந்தால் போதும். கண்டிப்பாக அதில் வெற்றி பெறலாம். எதையும் எளிதாக கற்றுக் கொள்ளலாம். காலையில் நடனம், மாலையில் விளையாட்டுக்கு என்று நேரம் ஒதுக்கி விடுவேன். விடுமுறையில் ஆக்டிங். மேலும் எதைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செய்வேன். இதில் முக்கியமான ஒரு விஷயம்... வீட்டில் எல்லா வேலைகளையும் நானே செய்வேன் என்பதால் மற்ற கலைகள் அனைத்தும் செய்வதற்கு எனக்கு ஈஸியாக இருக்கிறது! கல்லூரியில் நடந்த சமையல் போட்டியிலும் இரண்டாம் பரிசு பெற்றுள்ளேன்.
சமீபத்தில் டெல்லியில் இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடந்த பெண்களுக்கான கலை இலக்கியப்போட்டியில் நடனமாடி 'பெஸ்ட் பாலே டான்ஸர்' விருதும், 'பெஸ்ட் ஜிம்னாஸ்டிக் டான்ஸர்' விருதும் பெற்றுள்ளேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான பாட்டுப் போட்டியில் முதல் பரிசை வென்றேன்" என்கிறார் பெருமிதத்துடன்...
அவரிடம், "அழகும், திறமையும் உடைய உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் வந்திருக்குமே?" என்றோம்.
"குழந்தையாக இருக்கும்போதே சினிமா வாய்ப்புகள் வந்தன. நிறைய தெலுங்கு, மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து நிறைய டாக்குமெண்டரி சினிமாக்களில் நடித்து வருகிறேன். இதுவரை ஆறு விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன். தற்போது '7ஆம் அறிவு' படத்தில் ஸ்ருதி கமலின் தோழியாக நடித்துள்ளேன்."
எதிர்காலக் கனவு குறித்து பேசுகையில், "நான் வக்கீல் ஆக வேண்டும் என்பது அம்மாவின் கனவு. அதை நனவாக்குவதுதான் எனது எதிர்கால லட்சியம். அதனால், அடுத்த வருடம் சட்டக் கல்லூரியில் படிக்கப் போகிறேன். 2012-ம் ஆண்டு லண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு செல்கிறேன். அங்கு ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளிடம் நிறைய ஆலோசனைகள் பெற்று, அதை அடிப்படையாக வைத்து 'ஜிம்னாஸ்டிக் டான்ஸ் அகாடமி' அமைத்து, இளம் தலைமுறைக்கு நடனம் கற்றுத் தரவேண்டும் என்பது என்னுடைய கனவு! இதையெல்லாம் சாத்தியமாக்கக் கூடிய முயற்சி, தன்னம்பிக்கை, தைரியம், துணிவு, பணிவு என அனைத்தையும் கற்றுக் கொடுத்துள்ளார், அவர்தான் எனக்கு ரோல்மாடல்" என்று தாயின் காலைத் தொட்டு வணங்குகிறார் அழகி சவிதா!
இவரின் அப்பா கிருஷ்ணமூர்த்தி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அம்மா ஜெயலட்சுமி பெண்களுக்கு டூவீலர் ஓட்டுவதற்கு கற்றுக் கொடுக்கிறார். அக்கா பினிதா பொறியியல் முடித்துவிட்டு வங்கியில் வேலை பார்க்கிறார்
Monika- Posts : 7
Join date : 2010-12-12
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Sun Dec 09, 2012 9:13 pm by msc_arun
» *~*Kavalan comedy Videos.*~*
Fri Aug 24, 2012 9:52 am by thirumalai
» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
Tue Feb 28, 2012 3:14 am by lavivi
» *~*இவன் அவன்*~*
Sat Mar 19, 2011 9:30 pm by Tamilkings
» *~*மரணம் நிச்சயம்!*~*
Sat Mar 19, 2011 9:28 pm by Tamilkings
» *~*கல்வி*~*
Sat Mar 19, 2011 9:26 pm by Tamilkings
» *~*ராணித் தேனீ*~*
Sat Mar 19, 2011 9:25 pm by Tamilkings
» *~*பெண்..........*~*
Sat Mar 19, 2011 9:23 pm by Tamilkings
» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
Sat Mar 19, 2011 9:21 pm by Tamilkings