TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*எம் வீர காவியம் நின்னு கேளுடா...ஈழம்!*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*எம் வீர காவியம் நின்னு கேளுடா...ஈழம்!*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*எம் வீர காவியம் நின்னு கேளுடா...ஈழம்!*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*எம் வீர காவியம் நின்னு கேளுடா...ஈழம்!*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*எம் வீர காவியம் நின்னு கேளுடா...ஈழம்!*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*எம் வீர காவியம் நின்னு கேளுடா...ஈழம்!*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*எம் வீர காவியம் நின்னு கேளுடா...ஈழம்!*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*எம் வீர காவியம் நின்னு கேளுடா...ஈழம்!*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*எம் வீர காவியம் நின்னு கேளுடா...ஈழம்!*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*எம் வீர காவியம் நின்னு கேளுடா...ஈழம்!*~*

Go down

*~*எம் வீர காவியம் நின்னு கேளுடா...ஈழம்!*~* Empty *~*எம் வீர காவியம் நின்னு கேளுடா...ஈழம்!*~*

Post by Tamilkings Sat Jan 29, 2011 10:17 am

எம் வீர காவியம் நின்னு கேளுடா...ஈழம்!





எம் வீர காவியம்
நின்னு கேளுடா
ஈழமுன்னா வெறும்
மண்ணு இல்லைடா..

புலி கொடி பறந்து
ஆண்ட தேசம்டா
உலகை
இன்றும் தாங்கும்
ஒற்றை இனமடா!

பெண்ணைத் தாயென
பார்த்த பூமிடா
வந்தவரெல்லாம்
வாழ்ந்த மண்ணுடா

பொண்ணும் பொருளும்
நிறைந்த சொர்க்கம்டா
போட்டதை எல்லாம்
விளைத்த வர்க்கம்டா..!

காலம் ஏனோ மாறி
போச்சிடா
கயவர்களாலே ஆடி
போச்சிடா

குழந்தையும் குடும்பமும்
மாண்ட சோகம்டா
கொலைவெறி தரித்து
நடந்த துரோகம்டா!

அறுபது வருடம்
எரியும் நெருப்புடா
அநீதி அழிந்திட
பூண்ட போருடா

இரண்டில் ஒன்றே
பார்க்கும் வீரம்டா
எதிர்க்கும் காலம்
தூரமில்லடா!

குண்டுகளெல்லாம்
உமிழும் எச்சில்டா
உயிரே கூட
துச்சமில்லடா

ஈழம் ஒன்றே
கனவு கனவுடா..
விடுதலை ஒன்றே
எல்லை கோடுடா!

காலம் என்ன -
களையா பறிக்கு(ன்)டா?

காலம் என்ன - எமை
களையா பறிக்கு(ன்)டா -
ஈழம் வெல்ல -
எதிர்த்தா நிற்கும்டா?

ஓரங் கட்டி
நின்ற கணக்கெலாம்
வீரம் பூட்டி
வெல்வதுறுதிடா

யாம் சேர்ந்தால் ஞாலம்
சுருண்டு போகும்டா -
தமிழன் மூச்சின் வெப்பம்
ஈழம் வெல்லும்டா!

யாமும் ஓர்தினம்
ஆளுவோமடா -
தமிழன் - ஆண்ட பெருமையை
பாடுவோமடா

உரக்கக் கத்தி
கூறுவோமடா
ஈழ விடுதலை வெல்லவே
சுவாசிப்போமடா!

வெற்றி என்பது
வெறும் - பேச்சி இல்லடா
புலிக்கொடி பறக்கும்
சாட்சி நாளடா

இதை நெஞ்சிலேற்றி
நித்தம் வாழடா
விடுதலை வெல்ல
உறுதி கொள்ளடா!! உறுதி கொள்ளடா!!!
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum