TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
இன்று காதலர் தினம் EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
இன்று காதலர் தினம் EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
இன்று காதலர் தினம் EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
இன்று காதலர் தினம் EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
இன்று காதலர் தினம் EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
இன்று காதலர் தினம் EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
இன்று காதலர் தினம் EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
இன்று காதலர் தினம் EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
இன்று காதலர் தினம் EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

Similar topics
    CONTACT ADMIN

    இன்று காதலர் தினம்

    Go down

    இன்று காதலர் தினம் Empty இன்று காதலர் தினம்

    Post by Yelarai Sun Feb 13, 2011 8:53 pm

    உலகம முழுவதும் இன்று காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ரெஸ்டாரண்ட், பூங்காக்கள், கடற்கரை, தியேட்டர்கள் என எங்கு பார்த்தாலும் காதலர்களின் கூட்டம் அலைமோதும். வாழ்க்கையில் ஒரு முறையாவது காதலிக்காமல் இருப்பவர்களை கண்டறிவது கடினம். ஏனெனில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு தருணத்தில் காதல் வந்து, சென்றிருக்கும். "ஜாதி, மதம், மொழியை கடந்து இரண்டு இதயங்கள் இணைவது தான் காதல்' என்று கவிஞர்கள் காதலை வர்ணிக்கிறார்கள். இத்தினத்தில் காதலர்கள் மட்டுமின்றி, திருமணம் செய்த தம்பதியர்களும் ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து, தங்களது அன்பை பரிமாறிக்கொள்கின்றனர்.

    யார் இந்த வாலன்டைன்:காதலர் தினத்துக்கு முன்னோடியாக கருதப்படும் வாலன்டைன் துறவி, ரோம் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர். தங்களது மத நம்பிக்கைக்காக உயிரை துறந்த துறவிகளின் நினைவை போற்ற வாலன்டைன் தினம் தோன்றியதாக கூறப்பட்டது. எனினும், இக்கதை 14ம் நூற்றாண்டில் மாறியது. ரோம் அரசர் இரண்டாம் கிளாடியஸ், இளைஞர்கள் திருமணத்தை தவிர்த்து, போர்க்களத்துக்கு கட்டாயம் வரவேண்டும் என்று கட்டளையிட்டார். இதற்கு வாலன்டைன் எனும் பாதிரியார் எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும் அவர் இளைஞர்களுக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்தாராம்.

    இதனால் ஆத்திரமடைந்த அரசர், அவருக்கு மரண தண்டனை விதித்ததாக கூறப்படுகிறது. பின் அவரது நினைவுநாளையே வாலன்டைன் தினமாக இளைஞர்கள் கொண்டாட தொடங்கினர்.

    20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் வாலன்டைன் தினம், காதலர்தினமாக மாறியது. அமெரிக்காவில் விடுமுறை தினமாக காதலர் தினம் அனுசரிக்கப்படுகிறது. பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில் இத்தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    காதல்பரிசு:இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் இ-மெயில், இன்டர்நெட், வாழ்த்து அட்டைகள், எஸ்.எம்.எஸ்., மற்றும் மொபைல் போன் என காதலர் தினம் புதிய பரிமாணத்தில் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் தங்களது அன்பிற்கு உரியவர்களுக்கு பரிசாக விலையுயர்ந்த அணிகலன்கள், பரிசுகள், சாக்லெட்டுகள், பூக்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை வழங்குகின்றனர். சிலர் தங்களது காதலை வெளிப்படுத்த இந்நாளை பயன்படுத்துகின்றனர். மேற்கத்திய பண்பாடான காதலர் தினத்தை வியாபார நோக்கங்களுக்காக வணிக நிறுவனங்கள் இந்தியாவில் பரப்புவதாக சில அமைப்புகள் எதிர்ப்புத்தெரிவிக்கின்றன. ஆனாலும் எதிர்ப்புகளை கடந்து காதலர் தினம் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. எதற்கும் ஒரு அளவு உண்டு. அதேபோல காதலனும், காதலர்களும் எல்லை மீறாமல் காதலர் தினத்தை கொண்டாடலாம்.
    நன்றி: தினமலர்

    Yelarai

    Posts : 9
    Join date : 2011-01-16

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum