TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
மீண்டும் படித்ததில் பிடித்தது - 0 EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
மீண்டும் படித்ததில் பிடித்தது - 0 EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
மீண்டும் படித்ததில் பிடித்தது - 0 EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
மீண்டும் படித்ததில் பிடித்தது - 0 EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
மீண்டும் படித்ததில் பிடித்தது - 0 EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
மீண்டும் படித்ததில் பிடித்தது - 0 EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
மீண்டும் படித்ததில் பிடித்தது - 0 EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
மீண்டும் படித்ததில் பிடித்தது - 0 EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
மீண்டும் படித்ததில் பிடித்தது - 0 EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

மீண்டும் படித்ததில் பிடித்தது - 0

Go down

மீண்டும் படித்ததில் பிடித்தது - 0 Empty மீண்டும் படித்ததில் பிடித்தது - 0

Post by Yelarai Mon Jan 17, 2011 5:40 am



நீண்ட நாட்களின் பின் படிதததில் பிடித்தது வாயிலகச் சந்திப்பதில் மகிழ்ச்சி உறவுகளே.....! புதிய ஆண்டில் ஒரு நல்ல ஆக்கத்தை வாசிக்கவும் உங்களுடன் பகிரவும் சந்தர்ப்பம் கிடைத்தது, தொடர்ந்தும் படித்ததில் பிடித்தவற்றை உங்களுடன் பகிர்வதற்கு முயற்சிக்கிறேன். புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வேண்டுகிறேன். ஈழநேசனில் வெளியான “மறப்போம் மன்னிப்போம்” என்ற ஆக்கம் உங்களுக்காக :


மறப்போம் ...... மன்னிப்போம்.....!

தவறு செய்வது மனித இயற்கை, மன்னிப்பது தெய்வீகம் என்பது பொதுவான வழக்கு. ஆனால் பொதுவாக இன்று திரைப்படங்களிலும் கதைகளிலும் 'பழி வாங்குதல்' என்பதையே பெரும்பாலும் காட்டிக்கொண்டு வருகிறார்கள். 'கண்ணுக்குக்கண்' என்று பழிவாங்கத் தொடங்கினால் இந்த உலகமே குருடாகிவிடும் (An eye for eye makes the whole world blind) என்கிறார் அண்ணல் காந்தியடிகள். ஆனால் திருவள்ளுவரும் பழி வாங்கும்படிதான் அறிவுரை கூறுகிறார், ஆனால் எப்படித்தெரியுமா?

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல். "-

இதுதான் அவர் பழிவாங்கக் கூறும் அறிவுரை. நமக்கு ஒருவன் துன்பம் செய்தால், அவனுக்கு மீண்டும் துன்பம் விளைவிக்க வேண்டும் என்று நினைப்பதுதான் மனித இயல்பு. அப்படிச் செய்கையில் எதிராளி மீண்டும் நம்மிடம் வஞ்சம் தீர்க்க முயல்வான். நாம் திரும்ப அவனுக்குத் துன்பம் செய்வோம். இப்படி இது ஒரு முடிவற்ற விஷவட்டமாக மாறிவிடும். ஆனால், திருவள்ளுவர் கூறும் வழி எப்படித் தெரியுமா? 'உங்களுக்கு ஒருவன் துன்பம் இழைத்தால், அவனுக்கு நீங்கள் நன்மை செய்யுங்கள். உங்களுக்குத் துன்பம் செய்தவன் அதை நினைத்து வெட்கப்படும்படி நன்மை செய்யுங்கள் என்று மட்டும் அவர் சொல்லவில்லை. அந்த நன்மையைச் செய்தவுடன் அவன் செய்த தீமையையும், நீங்கள் செய்த நன்மையையும் மறந்துவிடுங்கள். அதைச் சொல்லிக்காட்டாதீர்கள் என்கிறார் வள்ளுவர். ஏன்?

பெருமைக்காக நாம் ஒரு செயலைச் செய்வதானால், அதில் பலனிருக்காது. அது மட்டுமல்ல, 'நான் நல்லது செய்தேன், நான் நல்லது செய்தேன்' என்று சொல்லிக்காட்டிக்கொண்டே இருந்தால் எரிச்சல் உண்டாகலாமே தவிர, நன்றியுணர்வு எப்படி உருவாகும்? அதனால்தான், 'நன்னயம் செய்தல்' என்று கூறாமல், 'நன்னயம் செய்து விடல்' என்கிறார் வள்ளுவப்பெருந்தகை.

பொதுவாக நமது நினைப்பு என்ன தெரியுமா? பிறர் தவறு செய்ய நேர்கையில் 'மன்னிப்பு என்பது பிறருக்கு நம்மால் வழங்கப்பட வேண்டிய ஒன்று. மன்னிப்பதால் பிறருக்கு நாம் நன்மை செய்கிறோம்' என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? இந்தக் கதை அவ்வுண்மையை நமக்கு விளக்குகிறது.

ஒரு பள்ளியில் ஒரு நாள் வகுப்பாசிரியை, அனைத்து மாணவர்களிடமும் அடுத்தநாள் பள்ளிக்கு வரும்பொழுது ஒரு பையில் சில உருளைக்கிழங்குகளைப் போட்டு எடுத்து வரும்படி சொன்னார். மறுநாள் அவ்வாறே மாணவர்கள் அனைவரும் தங்களுடன் சில உருளைக்கிழங்குகளை எடுத்து வந்திருந்தனர். ஆசிரியை, அம்மாணவர்களைப்பார்த்து, "உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் கஷ்டம் கொடுத்தவர்களில், நீங்கள் யாரையெல்லாம் மன்னிக்க விரும்பவில்லையோ, அவர்கள் பெயர்களைப் பட்டியலிடுங்கள். பின் ஒவ்வொரு உருளைக்கிழங்கிலும் ஒருவர் பெயரை எழுதுங்கள், மீதமான உருளைக்கிழங்குகளை ஓரமாக ஒரு கூடையில் போட்டுவிடுங்கள் என்று" கட்டளையிட்டார்.

மாணவர்களும் அப்படியே செய்தனர். சிலர் இரண்டு உருளைக்கிழங்குகள் மட்டுமே வைத்திருந்தனர். சிலரிடமோ பத்து உருளைக்கிழங்குகள் வரை இருந்தன.பின்னர் ஆசிரியை, "நான் சொல்லும் வரை, நீங்கள் அனைவரும் இந்த உருளைக்கிழங்குகளை உங்கள் அருகிலேயே வைத்திருக்கவேண்டும். நீங்கள் விளையாடச்சென்றாலும் சரி, தூங்கினாலும் சரி, சாப்பிடும்பொழுதானாலும் சரி. இந்த உருளைக்கிழங்கு வைத்துள்ள பையினை நீங்கள் பிரியவே கூடாது." என்றார்.ஓரிரு நாட்களுக்குப் பிறகு, மாணவர்களால், இந்தச்சுமையைத்தூக்கிக் கொண்டு அலைவது கடினமாக இருந்தது. மனம் போல் நடக்கவோ, விளையாடவோ முடியவில்லை. மூன்று நான்கு நாட்களுக்குப் பின்னர், உருளைக்கிழங்குகள் கெட்டு, அதிலிருந்து ஒரு துர்நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது. அதிலும், அதிகமான உருளைக்கிழங்குகளை வைத்திருந்தவர்கள் பாடு, பெரும் திண்டாட்டமாகிவிட்டது.

மாணவர்கள் அனைவரும் ஆசிரியையிடம் போய், அந்த உருளைக்கிழங்கு உள்ள பையை வீசி எறிய அனுமதிக்கும்படி வேண்டினார்கள். ஆசிரியை புன்னகையுடன் "பாருங்கள், இந்த உருளைக்கிழங்குகளையே உங்களால் சுமக்க முடியவில்லை, இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் அது அழுகி நாற்றமெடுத்துவிட்டது. ஆனால், உங்கள் மனதில் நீங்கள் எத்தனை வருடங்களாக, எத்தனை மாதங்களாக உங்களுக்குப் பிடிக்காதவர்களைச் சுமந்துகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் மனம் எவ்வளவு வேண்டாத சுமைகளைத் தாங்கிக்கொண்டு நாற்றமெடுத்துக்கொண்டிருக்கும் என்பதை யோசித்தீர்களா? நல்ல விஷயங்களை வைத்துக்கொள்ள இடமில்லாமல், இந்த மோசமான நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருந்தால், நீங்கள் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும்? உங்கள் உருளைக்கிழங்குகளைக் குப்பையில் எறிவதுபோல், உங்களுக்குப் பிறர் மீது உள்ள வெறுப்பு, கோபதாபங்கள் இவற்றையும் வீசி எறியுங்கள். அப்பொழுதுதான், நீங்கள் வாழ்வில் முன்னேறமுடியும்", என்று சொன்னார். மாணவர்கள் புரிந்துகொண்டனர்.

உங்கள் பையில் எத்தனை உருளைக்கிழங்குகள் எவ்வளவு நாட்களாக, அழுகி நாற்றமெடுத்துக்கொண்டிருக்கின்றன? சற்றுக்கவனியுங்கள். வேண்டாத சுமைகளை வீசி எறியுங்கள்.மன்னிப்பது என்றால், தவறு செய்தவனிடம் 'உன்னை மன்னிக்கிறேன்' என்று மேம்போக்காகச் சொல்லிவிட்டு, மனதில் கிடந்து மறுகுவது அல்ல. அந்தக் கெட்ட நினைவை, அந்த வலியை உதறித்தள்ளிவிடுவது. சொல்வது எளிது, செய்வது கடினம்..... இதுதானே நீங்கள் நினைப்பது. உண்மைதான்...... ஆனால் முயன்றால் முடியாதது என்பதும் இல்லைதானே?

இன்னொன்று.... பிறர் செய்த தீமையை மன்னிப்பது என்பதற்கு அர்த்தம் 'ஏமாளியாக இருங்கள்' என்பதல்ல. "Fool me once, Shame on you; Fool me twice, shame on me" என்கிறது ஒரு ஆங்கிலப்பழமொழி. பிறரை மன்னிக்கும்பொழுது, அந்தப் பாடத்தை மறக்காமல், அதனால் உண்டான வலியை மட்டும் மறந்துவிடுங்கள். பிறர்மீது கோபமும் வெறுப்பும் இருக்கையில், உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மன வேதனை உண்டாகிறது. மன்னிப்பதால், உடலும் மனமும் புத்துணர்வு பெறுகின்றன. நெஞ்சம் அமைதியடைகிறது.

மன்னிப்பது கோழைத்தனமல்ல, வலிமையின் அடையாளம். மறப்போம்! மன்னிப்போம்!!

ப்ரியமுடன்..... ஏழரை

நன்றி: மஞ்சு


Yelarai

Posts : 9
Join date : 2011-01-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum